இரத்தினபுரியின் தமிழ் மகா வித்தியாலயமே
கலை வளம் தரும் எங்கள் கலையகமே
அறிவொளி பெருக்கிடும் இறையகமே
நாள் தோறும் நாமும் போற்றிடுவோம்.
நல்லறிவினை ஊட்டிடும் அதிபர் ஆசான்கள்
மனமுவர்ந்து என்றுமே போற்றிடுவோம்
பல்கலைக் கற்று பண்பினால் விளங்கி
பாரினில் நாமும் சிறந்திடுவோம்.
நாள் வித்தைகள் கற்றிட விந்தைகள் பெற்றிட
வித்தாய் அமைந்த கலையகமே
போற்றுவோம் அதனை புகழ்வோம் நம் இறைவனை
ஏற்றியே திகழ்வோம் நம் கலையகத்தை.
இரத்தின தீபத்தின் அறிவகமே!
வாழிய வாழியவே!
வாழிய வாழிய வாழியவே!